ஆபிரகாம் பண்டிதர் (1869 - 1919)
ஆபிரகாம் பண்டிதர் (1869 - 1919)
ஆபிரகாம் பண்டிதர் தமிழ் மருத்துவத்தில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்ததால்மூலிகைகளைப் பயன்படுத்தி ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் பல்வேறு சித்தமருந்துகளைத் தயாரித்தார். பிரிட்டிஷ் அரசு இவரது சேவையைப் பாராட்டி ‘ராவ்பகதூர்’ பட்டம் வழங்கியது. தமிழ் மருத்துவத்தில் மட்டுமல்ல, தமிழிசையிலும் ஆபிரகாம் பண்டிதர் சிறந்து விளங்கினார். முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார். தனது பல்லாண்டு கால தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்தசாகரத் திரட்டு’ என்ற இசை நூலாகத் தொகுத்து, 1917-ல் வெளியிட்டார். தமிழிசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக இது போற்றப்படுகிறது. புதுப்புது வகைப்பயிர்களை வேளாண்மை செய்வதிலும், காற்றாலைகளை நிறுவி நீர்ப்பாசனம் செய்வதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1911-ல் மின்சாரத்தில் இயங்கும் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவினார்.